Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டாச்சு…! கட்டுப்பாடு மீறும் மக்கள்…. ஆய்வாளர்கள் எச்சரிக்கை …!!

சேஜ் விஞ்ஞானியும் பேராசிரியருமான சூசன் மிச்சி பிரிட்டன் மக்களை தடுப்பூசி போட்ட பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

பேராசிரியர் ஜோனாதன் வேண்-டாம் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி போட்டபின் நாட்டுமக்கள் தொடர்ந்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து விஞ்ஞானி சூசன் மிச்சி நாட்டு மக்களை கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும்படி எச்சரித்துள்ளார். லைம்  நோய் மற்றும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி விநியோகத்தில் இருந்து சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் கட்டுப்பாடுகளை குறைந்தளவே கடைப்பிடிப்பதாக  கூறப்படுகிறது .

டிசம்பர் முதல் தேசிய கணக்கெடுப்புகளில் சுமார் 29 % மக்கள் தடுப்பூசி போட்ட பிறகு கட்டுப்பாடுகளை குறைவாகவே கடைபிடிப்போம் என்றும், 11 % மக்கள் கடைப்பிடிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |