Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டால் டோனட் இலவசம் .. கிரிஸ்பி க்ரீம் அதிரடி அறிவிப்பு…

அமெரிக்காவில் கிரிஸ்பி க்ரீம் என்ற உணவகம் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு தடுப்பூசி அட்டையுடன் வருபவருக்கு டோனட் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக பலநாட்டு மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு  தற்போது அதனை செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் தான் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள கடையில் டோனட் உண்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்றுகொண்டிருந்தனர்.

அதன்பிறகு அவர்களிடம் விசாரித்த போது க்ரிஸ்பி க்ரீம்  என்ற உணவு நிலையம் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் டோனட் இலவசமாக வழங்குவதாக அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா  பரவுதலை தடுப்பதற்காகவும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாகவும் தடுப்பூசி போட்டுக் கொண்ட அட்டையுடன் வருபவர்களுக்கு டோனட் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தச் சலுகை ஆண்டுமுழுவதும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் அதில் நாங்கள் தலையிடவில்லை ஆனால் எவ்வளவு சீக்கிரம் தடுப்பூசியை போட்டு கொள்கிறோமோ அந்த அளவிற்கு பாதிப்பிலிருந்து காப்பாற்ற பட்டுவோம் என்ற நோக்கத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மார்ச் 29 இல் இருந்து மே 24ஆம் தேதி வரை டோனட்டுன் காபியும் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். டோனட் வெறியர்கள் தடுப்பூசி போட்டுகொண்டு  டோனட் சாப்பிடுவதற்காக கூட்டம் கூட்டமாக தினமும் கிரிஸ்பி க்ரீம் கடையின் முன் அலைமோதிகின்றனர் என்று கூறியுள்ளனர் .

Categories

Tech |