Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டால் மதுபானம் இலவசம்… அதிரடி அறிவிப்பு..!!

குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போட்டால் மதுபானம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முக கவசம் அணிதல், இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் என பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. மேலும் பொதுமக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குஜராத்தில் குர்கான் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் உணவகம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இலவச மதுபானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை காட்டினால் இலவசமாக பீர் வழங்கப்படும் என கூறியுள்ளது. மேலும் ஜான் விஷன் என்ற அமைப்பு ஒன்று தடுப்பூசி போட்டுக் கொள்வது அவர்களுக்கு இலவசமாக மூன்று வேளை உணவு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |