Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டால்…. குழந்தை பெறும் திறன் பாதிக்கும்…? – வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பெண்களின் குழந்தை பெறும் திறனை பாதிக்கும் என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

இந்த செய்தி உண்மையில்லை என்றும் டாக்டர் அருண் ஷார்பா (ICMR) தெரிவித்துள்ளார். குழந்தை பெற்றுக் கொள்ளும் திறன் மீது பாதகமான விளைவுகளை கொரோனா தடுப்பூசி ஏற்படுத்தவில்லை. இந்த தகவல்  தவறான கருத்தின் அடிப்படையில் பரவுகிறது. பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டாம், கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |