Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள்…. தவிர்க்க வேண்டிய உணவுகள்…!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் எதை எல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எப்போதும் போலவே எல்லா வகையான உணவுகளையும். அதிலும் குறிப்பாக பருப்பு வகைகள் மற்றும் சூப் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புரதச் சத்து மிக்க உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும் அசைவ உணவால் செரிமான பிரச்சனை ஏற்படும் என்பதால் சில தினங்களுக்கு அதனை தவிர்ப்பது நல்லது. எந்தத் தடுப்பூசி போட்டாலும் 72 மணி நேரத்திற்கு மது அருந்தக் கூடாது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மது அருந்தாமல் புகை பிடிக்காமல் இருப்பது மிக நல்லது. மேலும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் சரியாக இருந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதயக் கோளாறுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் மருத்துவரின் அறிவுரை பெற வேண்டும். எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆபத்தானது.

Categories

Tech |