Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட…. ராம்நாத் கோவிந்த்…!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்துவதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதைஎடுத்து இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முன் களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிரதமர் மோடி போட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து நடிகர் கமலும் நேற்று போட்டுக்கொண்டார் இந்நிலையில். இதையடுத்து  இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய மகளுடன் டெல்லியில் உள்ள ஆர்.ஆர் ராணுவ மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இது குறித்த பேசிய அவர், வரலாற்றில் வெற்றிகரமாக தடுப்பபூசி இயக்கத்தை செயல்படுத்தி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்களுக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |