தமிழ் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற சிவாங்கி தனது முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அவர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.