Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ராஜஸ்தான் முதல்வர் …!!

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கொரோணா தடுப்பூசியை ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.

உலக அளவில் அதிகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த பணி கடந்த ஜனவரி 16ம் தேதியிலிருந்து தொடங்கியது. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மார்ச் 1ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.  மேலும் அனைத்து மாநிலத்தின் முதல்வர்கள், அமைச்சர்கள், ஆளுநர்கள் போன்றோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்ச் 5ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார், அவரோடு சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Categories

Tech |