Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட…. 20 மருத்துவர்களுக்கு மீண்டும் கொரோனா…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் ஏற்கனவே கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட 20 மருத்துவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வெஈடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இதுபோல பாட்னா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |