Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட…. பிரபல காதல் ஜோடிகள்…!!!

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு புறம் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் ஒரே வழி என்று கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தடுப்புசி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு பயம் கலந்த குழப்பமும் இருந்து வருகிறது. இதனால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக ஒரு சில பிரபலங்கள் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு மக்களும் தடுப்பூசி போடுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா இயக்குனர், விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களும் போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |