கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க உருமாறிய கொரோனா, பறவைக்காய்ச்சல் என வரிசையாக மக்களை ஆட்டம் வருகின்றது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபக் மராவி என்பவர் கடந்த மாதம் 12ஆம் தேதி தடுப்பூசி போட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்தால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் தீபக் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து உடற்கூறாய்வு பரிசோதனையில் தீபக் உடலில் விஷம் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே கொரோனா தடுப்பூசிக்கும், தீபக் இறப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று பேயோஎன்டேக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.