பெண் ஒருவர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட இரண்டு நாட்களில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுகீசிய நாட்டைச்சேர்ந்த Soniya Acevedo (41) என்ற பெண் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு குழந்தைகளின் தாயான இவர் கடந்த வருடம் டிசம்பர் 30-ஆம் தேதி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசியை போட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து கடந்த புத்தாண்டு அன்று திடீரென்று உயிரிழந்துள்ளார். மேலும் அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏதும் இல்லையாம். மேலும் தடுப்பூசி போட்ட பின்பும் அறிகுறி எதுவும் தோன்றவில்லை என்று கூறப்படுகிறது.
காரணமின்றி திடீரென மகள் உயிரிழந்ந்துள்ளதால் அவரின் தந்தை Abillo Acevedo மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் தன் மகளின் இறப்பிற்கான காரணம் தெரிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் புத்தாண்டு தினத்திற்கு முந்தைய தினம் நாங்கள் சேர்ந்து உணவருந்தினோம். அதன் பின் வீட்டை விட்டு வெளியே சென்ற என் மகளை நான் உயிருடன் பார்க்கவில்லை என்று கதறியுள்ளார். மேலும் புத்தாண்டு தினத்தன்று காலை 11 மணியளவில் Soniya உயிரிழந்துள்ளதாக Abillo விற்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவரின் திடீர் உயிரிழப்பிற்கு காரணம் தெரியவில்லை. மேலும் Soniyaவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.