உத்தரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட வந்த மக்கள் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம், நொய்டா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த மக்கள் வரிசையில் சமூக இடைவெளி விட்டு நில்லாமல் கூட்டமாக ஒரே இடத்தில் குவிந்து நின்றனர். முக கவசம் அணிந்திருந்த போதும், முறையான இடைவெளிவிட்டு நிற்காமல் கும்பலாக கூடி நின்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகும். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் மக்கள் அனைவரையும் வரிசையில் சமூக இடைவெளியை விட்டு நிற்கும்படி கேட்டுக் கொண்டனர்.