இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சில விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது.
அதனால் மக்கள் பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசி விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு அமர்வும் 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போடலாம். தடுப்பூசி போட்ட உடன் பக்க விளைவு ஏற்படுகிறதா என 30 நிமிடம் கண்காணிக்கவேண்டும். தடுப்பூசி எடுத்துச்செல்லும் கேரியர், குப்பைகள் மற்றும் தடுப்பூசியைப் பாதுகாக்கும் ஐஸ்கட்டிகள் உள்ளிட்ட அனைத்தையும்சூரிய ஒளி நேரடியாக படாமல் பாதுகாக்க வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் முன்பதிவு செய்தவருக்கே முதலில் தடுப்பூசி போட வேண்டும்.