Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி, மருந்துகள் GST வரி சலுகை…. மத்திய அரசு குழு அமைப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள காரணத்தால், கொரோனா தடுப்பு ஊசி உட்பட அனைத்திற்கும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் ஜி எஸ் டி யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மேகாலயா முதலமைச்சர் கொன்ராட் சங்மாவை அமைப்பாளராக கொண்ட குழுவில் தெலுங்கானா, உத்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் கேரள மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Categories

Tech |