நாமக்கல் மாவட்டத்திலுள்ள சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிப்பேட்டையில் அரசு சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது.
அந்த முகாமில் டாக்டர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்து தடுப்புசி போட்டுள்ளனர். இதனையடுத்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தடுப்பூசி முகாம் நடைபெற்றதால் குறைந்த அளவிலான பயனாளிகள் மட்டுமே தடுப்பூசி போடுவதில் கலந்து கொண்டுள்ளனர்.