கொரோனா தடுப்பூசியை முதலில் யாருக்கு போடப்பட வேண்டும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த தடுப்பூசியை முதன்முதலாக ஆசிரியர்கள் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பிற முன்னணி தொழிலாளர்களுக்கு போட முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி எப்படி வினியோகிப்பது? மற்றும் அதை முதலில் யாருக்கு போட வேண்டும்? என்பதை இப்போது திட்டமிட வேண்டும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் பிலிப் கிளார்க் தெரிவித்துள்ளார். கொரோனா முதல் அலையின் போது பல சுகாதார ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் . மேலும் சுகாதார ஊழியர்களுக்கு அடுத்தபடியாக நாம் யாரைப் பாதுகாக்க வேண்டுமென்று குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். நம்மிடம் தேவையான அளவு தடுப்பூசி இருந்தால் அனைவருக்கும் போடலாம். ஆனால் அதில் யாருக்கு முதலில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியம்.
எனவே பேருந்து ஓட்டுனர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள், டிரைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட வெளியே சென்று ஆபத்தான நிலையில் வேலைசெய்யும் அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்நிலையில் கண்டிப்பாக வயதை வைத்து தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நடவடிக்கை உண்மையில் சமநிலைப் படுத்தும் செயலாகும். ஆதலால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலரை நாம் கருத்தில் கொண்டு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.