Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி மையங்களில்…. மாற்றுத்திறனாளிகளுக்கு – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்துபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.இதற்கு மத்தியில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அனைத்து கொரோனா தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை மற்றும் சக்கர நாற்காலிகள் செல்லும் வகையில் சாய்தளம் அமைக்கவும், தேவைப்பட்டால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |