Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி மையங்கள் இன்று இயங்கும்…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியதால் கடந்த ஓரிரு நாட்களாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் சென்னையில் வழக்கம் போல் கொரோனா தடுப்பூசி மையங்கள் இன்று இயங்கும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் முறை மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று பதிவு செய்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |