இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணிகள் இந்தியா முழுவதும் தீவிரமாக நடைபெற்றது. இதனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை குறைத்துள்ளது.
அதன்படி பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ.1,200லிருந்து ரூ.225 ஆகவும், சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸின் விலையை ரூ.600லிருந்து, ரூ.225 ஆகவும் குறைத்துள்ளது. நாடு முழுவதும் நாளை 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட உள்ள நிலையில் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.