சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து ரயில்வே கோட்ட மருத்துவமனையில் 45 வயதுக்கு மேற்பட்ட ரயில்வே அலுவலர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.