20.16 கோடக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாநிலம், யூனியன் பிரதேசங்களில் இன்னும் இருப்பு இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று தன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய அரசானது நேரடிமாநில கொள்முதல் வாயிலாக இதுவரையும் இலவசமாக,192.27கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் மூலம் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 %-த்தை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. நாடு முழுதும் தடுப்பூசியின் தீவிரத்தை விரைவுபடுத்துவதற்கும் விரிவாக்குவதற்கும் மத்திய அரசானது உறுதிபூண்டுள்ளது எனவும் அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதனிடையில் அமைச்சகத்தின் கூற்றுப்படி, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16, 2021 அன்று தொடங்கியது.