Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. 3ம் கட்ட பரிசோதனை…. இவரும் போட்டுக்கிட்டாரு …!!

மூன்றாம் கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பூசி மருந்தை அமீரக துணை அதிபர் தன் உடம்பில் செலுத்தி பரிசோதனை செய்துள்ளார்.

துபாய் அமீரகத்தில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி அபுதாபி மற்றும் அல் ஐன் தன்னார்வர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யும் திட்டம் தொடங்கியது. இந்த திட்டம் தனியார் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி பரிசோதனை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உடம்பில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சீனாவிலுள்ள வுகானில் சைனா நேஷனல் பயோடெக் குழுமத்தின் சார்பில் வெற்றிகரமாக 2ம் கட்ட பரிசோதனை செய்த தடுப்பூசி மருந்து தான் தற்போது அமீரகத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனையடுத்து மூன்றாவது கட்டமாக தடுப்பூசி பரிசோதனை அமீரகத்தில்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி மருந்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், தமிழக மந்திரிகள் உள்பட பலரின் உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை போட்டவர்கள் 42 நாட்களில் 17 தடவை மருத்துவ பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

இந்நிலையில் நேற்று துபாயில் உள்ள சுகாதார மையத்திற்கு வந்த அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித்தின் உடலில் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் தடுப்பூசி போட்டது குறித்து கூறுகையில், “அனைவரும் சுகாதார பாதுகாப்பு மற்றும் நல்ல உடல் நலத்தோடு வாழ வேண்டும் என நான் விரும்புகிறேன். மேலும் இந்த தடுப்பூசி கிடைப்பதற்கு அயராது பணியாற்றிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். அவர்களுடைய அர்ப்பணிப்புகள் நம்மை பெருமை அடைய செய்கிறது” என்று குறிப்பிட்டார். இந்த 3ம் கட்ட பரிசோதனை வெற்றி பெற்றால் வர்த்தக ரீதியிலான தடுப்பு மருந்து அமீரகத்தில் தயாரிக்கப்படும் என அமீரக அரசு கூறியுள்ளது.

Categories

Tech |