சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது தற்போது கொரோனா தொற்றினால் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 54 ஆயிரத்து 66 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், மேலும் 37 ஆயிரத்து 51 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தடுப்பூசி இருப்பு உள்ளதால் தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என கலெக்டர் தெரிவித்துள்ளார.