சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொற்று பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் நடத்தி தினமும் 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதுடன் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கொரோனா அதிகரிப்பின் காரணமாக பொது மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 340 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.