தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்குவதால் சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறையும் அளவிற்கு பயணிகள் ஏற்றக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்யவேண்டும். சானிடைசர் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் கூட்டம் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.