குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வுப், தற்காப்பு பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும்.
வேகமாக பரவி வரும் கொரோனோவை தடுப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதை நம் வீட்டு பிள்ளைகள் அறிந்திருக்க மாட்டார்கள், அதனால் அவர்கள் விளையாட்டாக இருப்பார்கள். நாம் தான் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை பற்றி எடுத்துரைத்து அலட்சியம் இல்லாமல் இருக்க செய்ய வேண்டும்.
இந்த நேரத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். இவற்றிற்கு ஒரு ஈஸியான முறை இருக்கிறது. அவர்களை எப்பொழுதும் என்கேஜ்டு ஆக வைத்திருப்பது தான். அவர்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று பெற்றோர்கள் தெரிந்து செயல்படுங்கள்.
வீட்டுக்குள்ளயே அடைபட்டு இருப்பது என்பது அனைவர்க்கும் சற்று சிரமமான விஷியம் தான், அதிலும் குழந்தைகளுக்கு தினமும் ஒரே இடத்தில் அடைபட்டுக் கிடப்பதென்பது, சிரமமான காரியம் ஆகும். எனவே அவர்கள் அவ்வப்போது ஹைப்பராக ரியாக்ட் செய்வார்கள். அதனால் அவர்கள் பேசும்போது குறுக்கே நீங்கள் பேசாமல் கவனியுங்கள். குழந்தைகளின் வார்த்தைகளை எப்போதும் உதாசீனப்படுத்தாதீர்கள். எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். இந்த நேரத்தில், உங்கள் அரவணைப்பு மட்டுமே அவர்களுக்கான ஆறுதல்.