Categories
தேசிய செய்திகள்

கொரோனா தலைநகராக மாறும் டெல்லி… நாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு… வருத்தமளிக்கும் டெல்லி உயர்நீதிமன்றம்… !!!

நாட்டில் கொரோனா தலைநகராக டெல்லி விரைவில் மாறப்போகிறது என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மிகுந்த வருத்தத்துடன் நேற்று தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் முதல்-மந்திரி கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்து, பண்டிகை நாட்களை மிக கவனத்துடன் கொண்டாடும்படி மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய பணியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு நான்கு மாதங்களுக்கும் கூடுதலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற வருத்தத்துடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது பற்றி மருத்துவர் ஒருவர் கூறுகையில், “போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக நாங்கள் அனைவரும் மேயரிடம் சம்பளம் பற்றி கூறினோம். ஆனால் அவர் வடக்கு டெல்லி மாநகராட்சியில் பணம் இல்லை என்று கூறிவிட்டார். இது குறித்து பல்வேறு மனுக்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரணை செய்த நீதிபதிகள் கூறும்போது, “வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சி மற்றும் டெல்லி அரசு ஆகியவை நிதி அல்லது சம்பள விடுவிப்பு பற்றி புதிய நிலை அறிக்கையை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 16ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது. கொரோனாவின் தலைநகராக டெல்லி விரைவில் மாற போகிறது. அதற்கு நாள்தோறும் அதிகரித்து கொண்டிருக்கும் பாதிப்பு எண்ணிக்கை தான் காரணம். அந்த விவகாரத்தில் நாங்கள் தீவிர கவனம் செலுத்த போகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |