Categories
மாநில செய்திகள்

கொரோனா தாக்கம் இன்னும் குறையல…. தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதாவது பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் நடந்த தடுப்பூசி முகாமில் 17,55,364 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள twitter பதிவில், கொரோனா 19ஆவது மெகா தடுப்பூசி முகாமில் 17,55,364 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் கொரோனா தாக்கம் அகலவில்லை என்பதை உணர்ந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசிகளை மக்கள் அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

Categories

Tech |