Categories
தேசிய செய்திகள்

கொரோனா தாக்குதல் – சிகிச்சை பெற்ற கேரள மாணவி குணமடைந்தார் ..!!

கொரோனா வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வந்த கேரள மாணவி குணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில்  நாட்டையே அதிர வைத்த கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2009ஆக உயர்ந்துள்ளது. 75,000த்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க சீன அரசு உஹான் நகரில் 3வது மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனையை கட்டியுள்ளது. 4,500 படுக்கைகளுடன் வசதிகொண்ட இந்த மருத்துவமனையை 50,000 சதுர மீட்டர் பரப்பளவில்  உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் இருந்து கேரளா வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்களை தனிமை படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மாணவி பூரண குணடைந்ததாக சொல்லப்படுகின்றது.

Categories

Tech |