கொரோனா வைரஸ் குறித்த புதிய தகவல் ஒன்றை அமெரிக்காவின் நோய் தடுப்பு & கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது சில நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள்,
இந்த நோய் குறித்த புதிய புதிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் அந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவும் வீரியத்துடன் 90 நாட்களுக்கு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. எனவே கடும் பாதிப்புக்கு உள்ளானவர்களை அடிக்கடி சோதனை செய்யவும், 90 நாட்கள் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தி, இந்த ஆய்வை நடத்திய அமெரிக்காவின் நோய் தடுப்பு & கட்டுப்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.