நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட உத்திர பிரதேச முதல்வர் யோகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 14 ஆம் தேதி கொரோனா பாதித்ததையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட அவர் தற்போது கொரோனா அறிகுறிகள் தீவிரமாகியுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.