Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது …!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் சிறப்பாக சேவை புரிந்த மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவாளர்கள் உலக தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று விருதுகளை வழங்கினார். கொரோனா தொடரின் போது சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துமனைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மறைந்த மருத்துவர் சைமன் நிகரற்ற சேவைக்கான விருது அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அதேபோல ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இருவருக்கும் வழங்கப்பட்டது.

திரைத்துறையை சேர்ந்த வடிவுக்கரசி, வையாபுரி, ரோபோ சங்கர், சிங்கமுத்து ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா பரவலுக்கு முகக்கவசம் அணியாதது. சமூக இடைவெளியை கடைபிடிக்காதது காரணம் என்றும் தற்போது பண்டிகை காலங்கள் என்பதால் தொற்று அதிகளவில் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் கொரோனா அறிகுறிகள் வரும்போதே மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |