நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் ‘என்னமோ ஏதோ’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து நடிகர் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் . பின்னர் நடிகர் சூர்யாவின் ‘என் ஜி கே’ படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் . இதன் பின் மீண்டும் கார்த்தியுடன் ‘தேவ்’ திரைப்படத்தில் நடித்தார். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். பின்னர் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததாக செய்திகள் வெளியானது . இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
Thankyou for all the love ❤️ pic.twitter.com/XwhHtMubKf
— Rakul Singh (@Rakulpreet) December 29, 2020
அதில் எனக்கு ‘கோவிட் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் முழுமையாக குணமடைந்து விட்டதாக உணர்கிறேன் . எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் . வருகிற 2021 ஆம் ஆண்டை பாசிட்டிவ் எண்ணத்துடனும் நல்ல உடல் நலத்துடனும் தொடங்க காத்திருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார் . இதனால் நடிகை ரகுலின் ரசிகர்களும் திரையுலக நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் .