கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக எந்த நாடும் கூறமுடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனும் ஊரடங்கு விதிகளை தளர்த்துவதில் எந்த அளவுக்கு உலக நாடுகள் தீவிரமாக இருக்கின்றனவோ, அதே அளவிற்கு நோய்த்தொற்றை தடுப்பதிலும் தீவிரம் காட்ட வேண்டுமெனவும் கூறினார்.
கட்டுப்பாடுகள் இல்லாமல் ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் எனவும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக எந்த நாடும் நடிக்க முடியாது எனவும் பெட்ரோஸ் அத்தானம் கூறினார். மக்கள் பணிக்கு திரும்புவதும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதும் உரிய பாதுகாப்புடன் நடைபெற வேண்டும் என உலக சுகாதார அமைப்பு விரும்புவதாகவும் டெட்ரோஸ் அத்தானம் கூறினார்.