Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று – இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை… அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை..!!

இந்தியாவில் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 தொட்டுள்ளது.  இதுவரை 113 இந்தியர்களும், 24 வெளிநாட்டினரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் குடும்ப நலம் மற்றும்  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் 14 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • கேரளாவில் 26 பேரும்,
  • கர்நாடகாவில் 11 பேரும்
  • தெலுங்கானாவில் 5 பேரும்
  • டெல்லியில் 8 பேரும்
  • உத்தரபிரதேசத்தில் 15 பேரும்

பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் கர்நாடகாவில்  தலா ஒருவர் கொரோனோவால்  இறந்த நிலையில், தற்போது மும்பையில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனையில் 63 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சமீபத்தில் துபாய்க்கு சென்ற இந்த நபர் மருத்துவர்களிடம் துபாய் சென்று வந்ததை மறைத்துள்ளதாக, மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்தியாவில் கோரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 உயர்ந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் இறந்த முதியவருக்கு சிகிச்சை அளித்த 60 வயது மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்க பட்டுள்ளார். இதையடுத்து கர்நாடகாவில் அந்த மருத்துவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் உள்ள கனவுரியை சேர்ந்த முதியவர் கொரோனோவால் பலியானதை தொடர்ந்து, அங்கு மக்கள் நடமாட்டத்திற்கு மாநில அதிகாரிகள் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். அங்கு வசிப்பவர்களின் வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே காய்கறி வாங்குவதற்கும் மற்ற ஏதேனும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கே நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது ஒட்டி அமைச்சர் முரளிதரனுக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. எனினும் அவர் தன்னைத் தானே தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என ஏ.எம்.சி.ஏ தெரிவித்துள்ளது.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியங்கள் மூடுவதற்கு இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை அடுத்து உலகில் அதிகளவு வளர்ந்து வரும் காதலின் நினைவுச் சின்னமான தாஜ்மஹால் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக இந்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் கொரோனா இல்லை என தெரிய வந்ததாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்த போதிலும், அந்த நபர் இன்னமும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார். கோரோனோவை சமாளிக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒரு சில குறிப்பிட்ட பிரிவுகளைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு ஒரு மாதத்திற்கு விசா வழங்கப்படாது என அறிவித்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 60 நாட்கள் கலந்து கொண்ட ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதி துவங்குவதாக இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை ஒத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா நாட்டில் இருந்து பயணிகள் இந்தியாவிற்குள் நுழைய இந்திய அரசு தடை விதித்துள்ளது. ஐக்கிய அரபு, அமீரகம், கத்தார், ஓமன், குவைத் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் குறைந்தபட்சம் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப் படுவார்கள் என இந்தியா அறிவித்துள்ளது.கொரோனோவை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் தோற்று இருக்குமா என சந்தேகப்படும் நபர்கள் பரிசோதனை செய்வதில் இந்தியா சுணக்கம் காட்டுவதாக நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறைந்தது 120 கோடி பேர் வாழும் இந்தியாவில் இதுவரை 6,000 பேருக்கு மட்டுமே குறைவான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்ன நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர் சங்கத்தின் தலைமை இயக்குனர் பல்ராம் பார்கவா வைரஸ் தாக்குதலில் தற்போது இந்தியா இரண்டாவது நிலையில் இருப்பதாக கூறினார். மூன்றாவது நிலையில் தான் உள்ளூர் மக்களுக்கு கொரோனா அதிகமாக பரவும். நாம் எந்த அளவு சர்வதேச எல்லைகளை மூடுகிறோம், எவ்வளவு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்பதை பொறுத்துதான் இந்தியா மூன்றாவது நிலை செல்லுமா இல்லையா என்பது  தெரியும்.

தற்போது இந்தியாவில் கொரோனா தோற்று மூன்றாவது நிலைக்கு செல்லாது என உறுதியாக சொல்ல முடியாது என அப்போது அவர் தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை 62 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்னும் 9 மையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். தனியார் பரிசோதனை மையங்களும் விரைவில் கோரோனோவை பரிசோதனை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்ய உள்ளோம்.   தேசிய அளவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான நேரத்தில் இலவசமாக பரிசோதனை செய்ய தனியார் மையங்கள் முன்வர வேண்டும் என அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |