கொரோனா தொற்றால் ஒரு லட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் “பால் ஸ்வராஜ் கொவைட் கோ” என்ற வலைத்தளத்தில் பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 3-வது அலை பரவலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் வரும் 19ஆம் தேதி காணொளி வாயிலான கூட்டத்தை ஆணையம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.