Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்று… கோமா நிலையிலிருந்த பெண்….காத்திருந்த இன்பஅதிர்ச்சி…!!

கொரோனா தொற்றால் கோமா நிலைக்கு சென்ற பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பிரிட்டிஷ் நாட்டின் கொலம்பியா என்ற பகுதியை சேர்ந்த பெண் Gillian McIntosh (37).  இவரது கணவர் Dave. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் Gillian இரண்டாவது  கர்ப்பமாக இருந்ததால் அவரது கணவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதையடுத்து தனது முதல் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக Dave  வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த Gillian க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரது நிலைமை மோசமானதால் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர்.

மேலும் Gillian கோமா நிலையில் இருந்ததால் அவளது குழந்தையை  அவரால் பார்க்க முடியவில்லை. இதனையடுத்து கடந்த வாரம் Gillian நினைவு  திரும்பியுள்ளார். இதனையடுத்து அவர் கண்விழித்து பார்த்தபோது முதன்முதலாக தன் மகனை பார்த்து உற்சாகம் அடைந்துள்ளார். இந்நிலையில் கோமா நிலையில் இருந்து Gillian குணமடைந்தாலும் சிறிது நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |