Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று – சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தனிமைப்படுத்த ஹோட்டல் அறைகள் முன்பதிவு..!

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்  ஹோட்டல்களில் தனிமைப்படுத்த அறைகளை முன்பதிவு செய்துள்ளனர் டெல்லி  மற்றும் உ.பி அரசு.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது  அதிகரித்துள்ளது. இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இரவு பகல் என்று பாராமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கும் இந்த தொற்று பரவக்கூடிய வாய்ப்புகள்  அதிகம் உள்ளது என்பதால் மருத்துவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும் மருத்துவர்களுக்கு டெல்லி மற்றும் உ.பி அரசு நட்சத்திர ஹோட்டல்களில் அவர்களுக்காக அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள லலித் என்ற சொகுசு நட்சத்திர ஹோட்டலில் அப்பகுதியை சேர்ந்த என்.எல்.ஜே.பி மற்றும் ஜி.பி. பந்த் மருத்துவமனை மருத்துவர்கள் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். இதற்காக அம்மாநில அரசின் சார்பில் ஹோட்டலில் 100 அறைகள் அவர்களுக்காக பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில்  இருக்கும் ஃபேர் பீல்டு, லெமன் ட்ரீ, ஹயாத் ஆகிய ஹோட்டல்களில் அறைகள் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஹோட்டல் அறைகளில் தங்குவார்கள் என்றும் அந்த மொத்த செலவையும் அம்மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |