Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இவங்க எல்லோரும் கண்டிப்பா போட்டுக்கணும்….. ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு…. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட சுகாதரத்துறை…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்க்காக தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரநிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை  தடுக்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்றை தடுக்கும் முயற்சியில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுப்பற்றி மாநகராட்சி தலைவர் கூறியுள்ளதாவது,  மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோர் 3 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள்.

இதனால் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளில் மாநகராட்சி பகுதிகளில் 16 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 10 மினி கிளினிக் மூலம்  போடப்படும் என்றும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |