பிரதமர் மோடி கொரோனா குறித்த நிலவரங்களை மாநில முதலமைச்சர்களுடன் தனித்தனியாக தொடர்பு கொண்டு கேட்டறிந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பல மாநிலங்களுடன் காணொளி வாயிலாக பல ஆலோசனைகளையும், நடைமுறைகளையும் கூறி வருகிறார். இந்நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து பிரதமர் மோடி ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களுடன் தனித்தனியாக மாநில நிலவரங்கள் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதனைத்தொடர்ந்து நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இமாசல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் மற்றும் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆகியோருடன் தனித்தனியாக தொடர்பு கொண்டு பிரதமர் கொரோனா நிலவரம் குறித்து கேட்டறிந்துளார். மேலும் இன்று கர்நாடகா, பீகார், உத்திரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு தடுப்பு பணிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார்.