நடிகர் விக்ரம் 1990-இல் வெளியான என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமானவர். அதன் பின்னர் 1999-ல் பாலா இயக்கத்தில் நடித்த சேது அவர் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மளமளவென படங்கள் குவிந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இவருக்கு ஒரு கதை பிடித்து விட்டால் அதற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர்.
தற்போது விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் என தொடர்ந்து படங்கள் வெளியாக உள்ளது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று நடிகர் விக்ரம் கொரோனா நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தார். லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். தற்போது கொரோனாவில் இருந்து மீண்டும் அவர் ஒரு ரசிகருடன் புகைப்படம் எடுத்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று பிரச்சினைகளுக்கு பிறகு விக்ரமை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.