உலகம் முழுவதும் ஒரு பெரும் தொற்றாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கி சுமார் 2 வருடங்கள் முடிந்துவிட்டன. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அந்த வைரஸ் இதுவரை 22 நாடுகளில் பரவி 3 அலைகளை உருவாக்கி பல்வேறு பொது மக்களை கொண்டுவந்து உலக மக்களை வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளது. இந்தத் தொற்றால் 27 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,00,000 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் தங்களின் பெற்றோரை இழந்த 10,000 சிறார்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்க வேண்டிய 50,000 இழப்பீட்டுத் தொகையை கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கே அளித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தகவலின்படி கொரோனா தொற்று பரவத் தொடங்கிய பின்னர், இந்தியா முழுவதும் சுமார் 10,000 சிறார்கள் தொற்று பாதிப்பு மற்றும் வேறு காரணங்களால் பெற்றோரை இழந்துள்ளனர். தங்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க கோரி விண்ணப்பிப்பது கூட அவர்களுக்கு மிகவும் கடினம். எனவே கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த சிறுவர்கள் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலைதளத்தில் விவரங்களுடன் இடம்பெற்றுள்ள சிறார்கள் ஆகியோரை அணுகி, மாநில அரசுகள் அவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.