புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக வேளாண்மை உதவி இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளப்பட்டி பகுதியில் ராம் என்பவர் வசித்து வந்தார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலிலுள்ள விராலிமலை பகுதியிலிருக்கு வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்ததால் சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை செய்த போது சோதனையின் முடிவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்தார். ஆனால் உடல்நலம் சீராகாத காரணத்தால் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராம் பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.