Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றை பருவக்கால நோயாக அறிவிக்க முடிவு… தாய்லாந்து அரசு தகவல்…!!!

தாய்லாந்து அரசு கொரோனா தொற்றை பருவகால நோயாக அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொது சுகாதாரத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இது பற்றி தெரிவித்திருப்பதாவது, தாய்லாந்து அரசு, அம்மை, ப்ளூ காய்ச்சல் போல உருவாகி மறையக்கூடிய, பருவகால நோயாக கொரோனாவை அறிவிப்பதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.

நாட்டில் சமீபத்தில் பதிவான கொரோனா தொற்றுகளை வைத்து இவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனினும், கொரோனா தொற்றை சாதாரண பருவகால நோயாக அறிவிப்பதற்கு, தற்போது இருக்கின்ற பரவல், தொடர்ந்து இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு மாகாணத்திலும் ஏற்பட்டிருக்கும் தொற்று விகிதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |