Categories
உலக செய்திகள்

‘கொரோனா நடவடிக்கையில் உலகம் தவறு செய்கிறது’…. WHO தலைவர்….!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்கனவே பரவலாகி இருக்கிறது. ஆனால் பல ஏழை நாடுகளில் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போய் சேரவில்லை. 1980- இல் எச்ஐவி, எய்ட்ஸ் நெருக்கடியின் போது செய்த அதே தவறை உலக நாடுகள் இப்போது செய்கின்றன என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்துள்ளார். மேலும் பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |