Categories
மாநில செய்திகள்

கொரோனா நடவடிக்கை, ஊரடங்கு குறித்து பேச…. ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு…!!!

தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக மருத்துவமனையில் படுகைகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும், அச்சமும் நிலவி வந்தது. மேலும் கொரோனா மருந்துகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மக்களை காப்பதற்காக தமிழக முதல்வர்அதிரடி நடவடிக்கைகளை  மேற்கொண்டு வந்தார்.

மேலும் தொற்று அதிகமுள்ள ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொரோனா குறித்த பணிகளை ஆய்வு செய்தார். கொரோனா நோயாளிகளை நேரடியாக சந்தித்தார். கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கை பிறப்பித்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியதன் காரணமாக கொரோனா  பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா  நடவடிக்கை மற்றும் ஊரடங்கு குறித்து பேச இன்று மாலை , தமிழக முதல்வர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை  சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |