Categories
மாநில செய்திகள்

கொரோனா: நாடு முழுவதும் கட்டுப்பாடு…? தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு முடிவினை பொறுத்து தமிழகத்தில் கட்டுப்பாடு விதிப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். கோயில் திருவிழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் என அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |