Categories
மாநில செய்திகள்

கொரோனா நான்காவது அலை… தடுப்பூசி ஒன்றே தீர்வு… சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!!!

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றின்  பாதிப்பு 100 க்கும் குறைவாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் நான்காவது அலை பரவாது என சொல்லமுடியாது. இதனை அலட்சியமாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எனவும் கொரோனா  நான்காவது அலையை  தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூரில் மெகா  தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், “உலக நாடுகளில் கொரோனா  மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் நான்காவது அலை பரவ  வாய்ப்பு உள்ளது. அனைவரும் 100% தடுப்பூசி என்பதே அரசின் இலக்கு” என்றார்.

Categories

Tech |