Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நூதன முறையில் கொரோனா நிதி…. கடன் தள்ளுபடி…. பாராட்டிய பொது மக்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி திரட்டி வரும் டீக்கடை உரிமையாளரை பொது மக்கள் பாராட்டியுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வம்பன் நால்ரோடு கடைவீதியில் பகவான் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர். இதனால் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கால் மக்கள் வேலையின்றி அவதிப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் டீ கடையில் கடன் வைத்திருந்த கடன் பாக்கியை தள்ளுபடி செய்துள்ளார்.

மேலும் கடைக்கு டீ குடிக்க வருகின்ற வாடிக்கையாளர்களிடம் மொய் விருந்து என்ற பெயரில் தனது கடையில் குடிக்கின்ற டீ மற்றும் பலகாரம் சாப்பிடுகின்ற பணத்தை தனது கடையில் வைக்கப்பட்ட உண்டியலில் போட்டு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக  மாவட்ட கலெக்டரிடம் வழங்க உள்ளதாக டீக்கடைகக்கு வருபவர்களிடம் பகவான் கூறியுள்ளார். இந்த செயலை குறித்து பகவானை பொது மக்கள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |